Enable Javscript for better performance
மோதல்: கரும்புகுப்பம் பகுதியினர் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    மோதல்: கரும்புகுப்பம் பகுதியினர் மறியல்

    By கும்மிடிப்பூண்டி  |   Published on : 17th April 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவரைத் தாக்கியவர்களை கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்த இரு சமுதாயத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் கரும்புகுப்பம் பகுதியினரின் சுவர் விளம்பரத்தில் அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக எழுந்த பிரச்னையில் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், கரும்புகுப்பத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரை புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சிலர் கடந்த சில நாள்களுக்கு முன் தாக்கினர்.

    இதுதொடர்பாக புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அயல் என்கிற சம்பத்குமாரைக் கைது செய்தனர்.

    ஆனால், இந்தப் பிரச்னையில் தொடர்புடையை அனைவரையும் கைது செய்ய வேண்டும்; உள்ளூர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமியிடம் கரும்புகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

    அதற்கு 2 நாள்களுக்குப் பிறகு அதிகாரிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்த்து வைப்பதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். இதை ஏற்காத கரும்புகுப்பம் பகுதியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார், தொடர்புடைய 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களைக் கைது செய்வதாகவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டனர். இச்சம்பவத்தால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai