Enable Javscript for better performance
வீட்டுமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பொன்னேரியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலர் ஜானகிராமன் சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்; வீடற்ற நிலையில் இருக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்பட அனைத்து வேலைகளுக்கும் குறைந்தபட்சக் கூலியாக ரூ.500 வழங்க வேண்டும்.

    முதியோர், ஆதரவற்றோருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித் தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அழிஞ்சிவாக்கம், நல்லூர் ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

    ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். மேலும், அந்த மாநிலச் சிறையிலுள்ள தொழிலாளர்களை மீட்க வேண்டும். செம்மரக் கட்டைகளை கடத்தும் முதலாளிகளை கைது செய்ய வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai