Enable Javscript for better performance
3 வட்டங்களில் இன்று \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய 3 வட்டங்களில் இன்று "அம்மா' திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்

    பேரில், மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களில் அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

    முகாம் நடைபெறும் இடங்கள்: திருவள்ளூர் வட்டம், சிவன்வாயல் கிராமத்துக்கு அப்பகுதி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும், திருத்தணி வட்டம், மாம்பாக்கம் கிராமத்துக்கு அப்பகுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பள்ளிப்பட்டு வட்டம், திருமால்ராஜுபேட்டை கிராமத்துக்கு அப்பகுதி கிராம நிர்வாக அலுவலக வளாகத்திலும் முகாம் நடைபெறும். இதில், அந்தந்தப் பகுதி கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai