Enable Javscript for better performance
காக்களூரில் புறக்காவல் நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரை அடுத்த காக்களூரில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆஞ்சனேயபுரம், பூங்காநகர், மாருதி நியூ டவுன், ஆசிரியர் காலனி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

    காக்களூர் ஆஞ்சனேயர் கோயில் எதிரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புறக்காவல் நிலையக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த புறக்காவல் நிலையத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன் கோரிக்கை விடுத்தார்.

    அவரது உத்தரவின்பேரில், இக்காவல் நிலையத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசீலன் றந்து வைத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜசேகர், துணைத் தலைவர் யமுனா தசரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai