Enable Javscript for better performance
குடியரசு தின விழா: ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழா: ரூ.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    By திருவள்ளூர்,  |   Published on : 27th January 2015 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் வழங்கினார்.

    இவிழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்து தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளர் சாம்சனும் சமாதானப் புறாவை பறக்க விட்டனர். பின்னர் அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 62 அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் துணை ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட வன அலுவலர் முகம்மது சகாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai