Enable Javscript for better performance
அடிப்படை வசதிகளைச் செய்து தர வஞ்சிவாக்கம் கிராமத்தினர் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிகளைச் செய்து தர வஞ்சிவாக்கம் கிராமத்தினர் கோரிக்கை

    By பொன்னேரி  |   Published on : 28th January 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரி, ஜன. 27:  பொன்னேரி - பழவேற்காடு சாலையில் வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும்  60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ரயில் நிலையச் சாலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 60 குடும்பத்தினர் குடிசை வீடுகள் கட்டி வசித்து வந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி ரயில் நிலையச் சாலையை ஒட்டி இருந்த வீடுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் அண்மையில் அகற்றப்பட்டது.

    அகற்றபட்ட 60 குடும்பத்தினருக்கும் பொன்னேரியில் இருந்து 10கி.மீ. தூரமுள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் வருவாய்த் துறையினர் இடம் வழங்கினர். தற்போது அந்தப் பகுதியில் அவர்கள் குடிசை வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் வருவாய்த் துறையினர் ஒதுக்கிய இடம் தாழ்வானப் பகுதியாக அமைந்துள்ளதால் சிறிய மழை பெய்தாலே வீட்டினுள் மழை நீர் புகுந்து விடுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    ரயில் நிலையச் சாலையில் இருந்த தங்கள் வீடுகள் அகற்றப்பட்டு 2 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வஞ்சிவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் தங்களுக்கு குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை என அங்கு வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    எனவே ஏற்கெனவே வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தற்போது வஞ்சிவாக்கம் பகுதியில் குடியிருந்து வரும் தங்களுக்கு மேற்கண்ட அடிப்படை வசதிகளை வருவாய்த் துறை, ஊராட்சி நிர்வாகம் விரைந்து செய்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai