Enable Javscript for better performance
ஆபத்தான வளைவு: வேகத் தடை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர், ஜன. 27: திருவள்ளூரில் உள்ள முகம்மது அலி தெருவில் ஆபத்தான வளைவில் வேகத் தடை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட

    10-ஆவது வார்டில் உள்ளது முகம்மது அலி தெரு. இந்தத் தெருவில் திருமண மண்டபம், சூப்பர் மார்க்கெட், வாழை மண்டி, கிளீனிக்குகள், மசூதி, கோயில், பள்ளிகள், கடைகள், குடியிருப்புப் பகுதிகள் என ஏராளமானவைகள் உள்ளன.

    மேலும் திருவள்ளூர் பஜார் வீதியில் இருந்து திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்தத் தெரு வழியாகச் செல்லலாம்.

    இதனால் இந்தத் தெருவில் எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.

    முகம்மது அலி தெருவும், 2-ஆவது தெருவும் இணையும் இடம் ஆபத்தாக உள்ளது. இந்த திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

    பெரும்பாலும் 2-ஆவது தெருவில் உள்ள பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் தங்களது பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களே விபத்தில் சிக்குகின்றனர். இதற்குக் காரணம் முகம்மது அலி தெருவில் நேராகச் செல்லும் வாகனங்கள் அந்த திருப்பத்தில் தங்களது வாகனங்களின் வேகத்தைக் குறைக்காததால் 2-ஆவது தெருவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர்.

    இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முகம்மது அலி 2-ஆவது தெரு அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai