Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர், ஜன. 27: காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை, தற்போதுள்ள பாஜக அரசு முடக்குவதைக் கண்டித்து, திருவள்ளூர் வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் குழுவின் எஸ்.சி. பிரிவு சார்பில் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் பஜார் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர்கள் பொன்னுராஜ், இமாலயா கக்கன்ஜி ஆகியோர் தலைமை வகித்தனர். திருவள்ளூர் நகரத் தலைவர் வி.செல்வகுமார் வரவேற்றார்.

    இதில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது, ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பசியைப் போக்க கடந்த ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த உன்னதமான திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசு முடக்க நினைக்கிறது. இந்த நிலை மாறும் வரை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், நாகராஜ், ஜெ.கே.வெங்கடேஷ், கிருஷ்ணராஜ், ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருவள்ளூர் நகரத் தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai