Enable Javscript for better performance
குடிநீர்ப் பிரச்னை: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர்ப் பிரச்னை: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    By திருவள்ளூர்  |   Published on : 28th January 2015 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர், ஜன. 27: திருவள்ளூர் அருகே உள்ள செஞ்சி ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுவதாகக் கூறி,காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

     திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்டது செஞ்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள மதுரவாசல் எனும் துணை கிராமத்தில் கடந்த 6 மாதமாக குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பல முறை முறையிட்டும் எவ்விதப் பலனும் இல்லை எனவும், ஒன்றிய நிர்வாகத்தினரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

     பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு கொடுக்கச் செய்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai