Enable Javscript for better performance
சாலை விபத்து:  தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி, ஜன. 27: கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த கூலித் தொழிலாளி பலத்த காயமடைந்து இறந்தார்.

    ஆரம்பாக்கம் அடுத்த பீமளவாரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுபான் சாகிபுவின் மகன் சம்சுதீன் (40).

    இவர் திங்கள்கிழமை, உறவினரான முனாப் என்பவரின் மகன் காஜா மொய்தீனுடன் சுண்ணாம்புகுளம் வரை சென்று வீடு திரும்பினார். அப்போது எளாவூர் - சுண்ணாம்புகுளம் கூட்டுச் சாலையில் வந்த போது சாலையின் குறுக்கே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்ததால் காஜா மொய்தீன் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் உட்கார்ந்திருந்த சம்சுதீன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த சம்சுதீன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai