Enable Javscript for better performance
திருவள்ளூர் மாவட்ட  காவலர்களுக்கு முதல்வர் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்கள் 25 பேருக்கு முதல்வர் பதக்கத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திங்கள்கிழமை வழங்கினார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர்கள் ஆர்.பிரபாகரன், ரவிச்சந்திரன், பார்த்திபன், பாபு, முருகன், முரளி, ரவிச்சந்திரன் உள்பட மொத்தம் 25 தலைமைக் காவலர்கள் சிறப்பாக சேவைப் புரிந்த காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தினத்தன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்  வீரராகவ ராவ் முதல்வரின் பதக்கத்தை வழங்கினார்.

    மேலும் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து பதவி உயர்வுப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai