Enable Javscript for better performance
மனைவியைக் கொன்ற கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லி,  ஜன. 27: மாங்காடு அருகே மனைவியை செங்கல்லால் தாக்கி கணவர் கொலை செய்தார்.

     மாங்காட்டை அடுத்த பரணிபுத்தூர், பெரிய கொளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனி (55). தனியார் நிறுவனக் காவலாளி. இவரது மனைவி காஞ்சனா (50).

     கடந்த ஞாயிற்றுக்கிழமை மது குடிக்க காஞ்சனாவிடம் பழனி பணம் கேட்டுள்ளார்.  காஞ்சனா பணம் தர மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பழனி அருகில் இருந்த செங்கல்லை எடுத்து காஞ்சனாவின் தலையில் அடித்துள்ளார்.

     இதில் பலத்த காயமடைந்த காஞ்சனாவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலன் இன்றி காஞ்சனா செவ்வாய்க்கிழமை இறந்தார்.

    மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai