Enable Javscript for better performance
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: கோட்டாட்சியரிடம் புகார் மனு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: கோட்டாட்சியரிடம் புகார் மனு

    By பொன்னேரி  |   Published on : 28th January 2015 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரி, ஜன. 27:   பழவேற்காட்டில் தனக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு போலி பட்டா தயார் செய்து அதை அபகரித்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர், பொன்னேரி கோட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

    பொன்னேரி வட்டம், பழவேற்காட்டில் பாபா ரிஷி கோயில் தெருவைச் சேர்ந்த காலேஷா (45) என்பவர் அளித்த மனு விவரம்:

    எனக்குச் சொந்தமான 4.50 ஏக்கர் நிலம் பிரளயம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியாகும். அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு,  தனிநபர் ஒருவர் போலி பட்டா தயாரித்து அதை அவரது மனைவி பெயருக்கு பத்திரப் பதிவு செய்துள்ளார்.

    இந்த போலி பத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இவர், அந்த நிலத்தை 2 பேருக்கு ஒப்பந்தப் பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அறிந்த நான், மேற்கண்ட பத்திரங்கள் போலியானவை என நில அபகரிப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, அதன் மூலம் திருவள்ளூர் நில அபகரிப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதன் பேரில் நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் மேற்கண்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். தற்போது மேற்கண்ட 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

    எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்துள்ள தவறான பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai