Enable Javscript for better performance
வீடு இழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி,  ஜன. 27:  குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான 2 குடும்பத்தினருக்கு நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் தலா ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

    திருத்தணி அக்கைய்யா நாயுடு தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயா, சரசு ஆகியோர் சனிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தனர்.

    இதில் ஜெயா மகள் பவித்ரா வீட்டில் தனியாக இருந்ததால் படிப்பதற்காக மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியபோது விளக்கு திடீரென கீழே விழுந்து வீடு தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அருகில் இருந்த வீட்டுக்கும் தீ மளமளவென பரவியது. இதில் 2 வீடுகளும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின.

    இதில் வீட்டில் இருந்த தடவாளப் பொருள்கள் தீயில் கருகின. தகவலறிந்த திருத்தணி தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த ஜெயா, சரசு ஆகிய குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரொக்கம், 25 கிலோ அரிசி மூட்டை, புடவை, வேட்டி ஆகியவற்றை திருத்தணி நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது,

    நகர்மன்ற உறுப்பினர்

    கோ.ஆறுமுகம், 16-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முத்தம்மாள் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai