Enable Javscript for better performance
வேன் மோதியதில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பூந்தமல்லி, ஜன. 27: பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது வேன் மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதி (35), பூ விற்கும் தொழிலாளி.

    இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை கோயம்பேடு பகுதிக்குச் சென்று பூக்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

    பூந்தமல்லி போக்குவரத்துப் பணிமனை அருகே சென்றபோது எதிரே வந்த வேன் மோதியதில் மதி பலத்த காயமடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் மதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மதி இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் வினோத் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai