Enable Javscript for better performance
அம்பேத்கர் ரத யாத்திரை தடுத்து நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட அம்பேத்கர் ரத யாத்திரையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் "சந்திப்போம் சிந்திப்போம் சாதிப்போம்' என்ற சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் சார்பில், கடந்த 20 ஆண்டுகளாக அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படம், புத்தர் சிலை அமைக்கப்பட்டு ரத யாத்திரை செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ரத யாத்திரை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுக்கூட்டம், பேரணி, ஊர்வலம் போன்றவற்றுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     இந்த நிலையில் கடம்பத்தூரில் அனுமதியின்றி நடைபெற்ற அம்பேத்கர் ரத ஊர்வலத்தை கடம்பத்தூர் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி விஜயகுமார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

     பேச்சுவார்த்தைக்குப் பின் அச்சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, ரத ஊர்வல வாகனம் கடம்பத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே போலீஸார் பாதுகாப்புடன் அப்பகுதி மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai