Enable Javscript for better performance
தரமற்ற சாலை அமைப்பதாகக் கூறி பொதுமக்கள் மறியல் - Dinamani

சுடச்சுட

    

    தரமற்ற சாலை அமைப்பதாகக் கூறி பொதுமக்கள் மறியல்

    By ஊத்துக்கோட்டை  |   Published on : 15th April 2016 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்துக்கோட்டை அருகே தரமற்ற சாலை அமைப்பதாகக் கூறி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட நந்திமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுச்சேரி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அச்சாலை குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது.

    இச்சாலையைச் சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை புதுச்சேரி கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகில் இருந்து நந்திமங்கலம் ஊராட்சி அலுவலகம் வரை தார்ச் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அந்தச் சாலை தரமானதாக இல்லை எனக் கூறி சாலை அமைக்கும் தொழிலாளர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai