Enable Javscript for better performance
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் விளையாட குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை அருகில் விளையாடிய சிறுவர்கள் நீர் நிலைகளில் விழுந்து இறந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது கிணற்றுக்கு அருகிலோ விளையாட அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai