Enable Javscript for better performance
அதிகரிக்கும் மணல் கொள்ளை: கவலையில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் ஆரணி ஆற்றுப்படுகையில் பல கிராமங்களில் ஆற்று மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
    எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த செங்காத்தாகுளம், மேல்மாளிகைபட்டு, கீழ் மாளிகைபட்டு, ஏரிக்குப்பம், வடமதுரை, வடமதுரை காப்புக்காடு,காந்தி நகர், ஏனம்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர், ஆத்துப்பாக்கம், அரியபாக்கம், தும்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள விவசாயிகள் நெல், வேர்க்கடலை, மல்லிகை, ரோஜா செடிகள், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு பயிர் செய்து விவசாயத்தை நடத்தி வந்தனர்.
    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகாலமாக மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ஆரணி ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் 15 முதல் 30 அடி ஆழம் வரை மணலை திருடி ஓரிடத்தில் கொட்டி அதை லாரிகள் மூலம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஆரணி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து விவசாயிகள் இதுவரை பதவியில் இருந்த ஆட்சியர்களிடம் மனு அளித்துள்ளனர். விவசாய சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சில நாள்கள் கடந்த பின் மீண்டும் மணல் கொள்ளை நடப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
    மணல் கடத்தல் குறித்து பொதுமக்கள் தட்டிக் கேட்டால் மணல் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களை மிரட்டுவதாகவும், கவலை தெரிவிக்கும் விவசாயிகள், ஆரணி ஆற்றில் மணல் திருட்டை நிரந்தரமாக ஒழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால் மட்டுமே மணல் திருட்டு குறையும் எனவும், இதற்கு மாவட்ட நிர்வாகத்தோடு காவல் துறையும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியபாளையம் அருகே தும்பாக்கம் பகுதியில்
    ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையால் பள்ளமான ஆற்றுப்பகுதி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai