Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பாளர்களால் தாமதமாகும் மழைநீர் கால்வாய் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பாளர்களால் தாமதமாகும் மழைநீர் கால்வாய் பணி

    By DIN  |   Published on : 08th October 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணியின் ஓர் அங்கமாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி ஆக்கிரமிப்பாளர்களால் முடங்கியுள்ளது.
    மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுமார் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் திருமழிசையில் இருந்து ஊத்துக்கோட்டை வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    இப்பணியில் சாலையை அகலப்படுத்தி இரு ஓரங்களிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், நடுவில் தடுப்புக் கட்டைகள் அமைத்தல், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி, திருப்பதி, பேரம்பாக்கம், சுங்குவார் சத்திரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், சி.வி.நாயுடு சாலை வழியாகச் சென்று வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல முக்கிய அலுவலகங்களும் இச்சாலையில் உள்ளதால் எந்நேரமும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
    சி.வி.நாயுடு சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணியை 70 சதவீதம் முடித்துள்ளனர். அதிலும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை சுருக்கி கால்வாய் கட்டப்பட்டுள்ளது. தற்போது சில இடங்களில் முக்கியப் பிரமுகர்களின் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கால்வாய் பணியை மேற்கொள்ளாமல் நெடுஞ்சாலைத் துறையினர் கிடப்பில் விட்டுள்ளனர்.
    எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai