Enable Javscript for better performance
இளைஞர் கொலை: மேலும் 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மீஞ்சூர் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசிய வழக்கில் மேலும் 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    இவர்களையும் சேர்த்து, இவ்வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மீஞ்சூரை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வசித்த வினோத் குமார் (21), வீடுகளில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார்.
    கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வேலைக்குச் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.
    இதுகுறித்த புகாரின்பேரில், மீஞ்சூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மீஞ்சூர் - அனுப்பம்பட்டு பகுதிகளுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் வினோத் குமாரின் அழுகிய நிலையிலான சடலத்தை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    விசாரணையில், முன்விரோதம் காரணமாக வினோத் குமாரை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.
    இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai