Enable Javscript for better performance
கவரப்பேட்டை அருகே 1 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கவரப்பேட்டை அருகே போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கவரப்பேட்டை போலீஸார் தச்சூர் கூட்டுச் சாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீஸார் சோதனை செய்தபோது அதில் செம்மரத் துண்டுகள் இருந்தது தெரியவந்தது.
    விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ஆரம்பாக்கம் அருகே உள்ள காரூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பதும், செம்மரக் கட்டைகளை அவர் செங்குன்றத்திலுள்ள நபருக்கு விற்க கொண்டு சென்று பேரம் படியாததால் திரும்பி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது.
    காரை சோதனையிட்டபோது, அதில் ஒரு டன் எடையுள்ள 41 செம்மரக் கட்டைகள் இருந்தன.
    தகவலின்பேரில், கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் மாணிக்கவேல் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
    தொடர்ந்து, பாஸ்கரையும், செம்மரக் கட்டைகளையும் போலீஸார், மாதர்பாக்கத்தில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai