Enable Javscript for better performance
பழுதடைந்த கட்டடத்தில் நியாய விலைக் கடை- Dinamani

சுடச்சுட

    

    ஏகாட்டூர் அருகே பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையை புதிய கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    ஏகாட்டூர் அருகே உள்ளது சேலை கண்டிகை கிராமம். இங்கு, 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    இவர்களின் பயன்பாட்டுக்காக, இங்கு பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்கப்பட்டது.
    வாரத்தில் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என இரண்டு நாள்கள் மட்டுமே இயங்கும் இந்தக் கடை குறுகிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. கட்டடம் சில இடங்களில் பழுதடைந்து காணப்படுவதால், மழைக் காலங்களில் கடையிலுள்ள பொருள்கள் நனைந்து வீணாகின்றது.
    இதனால், கடைக்கு பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
    எனவே, இந்த நியாய விலைக் கடையை புதிய கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது அதை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai