Enable Javscript for better performance
புதுமாவிலங்கை சமுதாயக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுமாவிலங்கை சமுதாயக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுமாவிலங்கை பகுதியிலுள்ள சமுதாயக் கூடம் மின் இணைப்பு வழங்கப்படாததால் பொதுமக்களின் பயன்பாடின்றி உள்ளது.
    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சியில், கடந்த 2004-ஆம் ஆண்டு ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில், மத்திய அரசின் தொழிலாளர் அமைப்புத் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையத்துடன் கூடிய சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.
    எனினும், இதுவரை அங்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேலும், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.
    இதனால், அங்கன்வாடி மைய குழந்தைகள் அவதிப்படுகின்றனர். சமுதாயக் கூடம் பயனின்றி உள்ளதால், சுற்று வட்டார கிராம மக்கள் அதிக செலவு வைக்கும் மண்டபங்களை நாட வேண்டியுள்ளது.
    ஊராட்சி நிர்வாகம் போதிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் சமுதாயக் கூடம் பழுதடைந்து வருகிறது. மேலும், இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
    எனவே, இந்த சமுதாயக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்கி, சீரமைத்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டுமென, அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai