Enable Javscript for better performance
அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் சிறையில் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 4 பேர் சிறையில் அடைப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கு தொடர்பாக, இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    திருத்தணி நகர்மன்றத்தின் 13-ஆவது வார்டு உறுப்பினர் ஆறுமுகம், கடந்த 9-ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
    இதுகுறித்து விசாரிக்க, காவல் துணை காண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜாகீர் உசேன் (23), ராஜேஷ் (22), பிரேம் குமார் (24), சின்னசாமி (43) ஆகிய நால்வரை திருத்தணி போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், புழல் சிறையில் அடைத்தனர்.
    இக்கொலை வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் வடிவேலுவிடம் போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு நபரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai