Enable Javscript for better performance
அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    
    panner

    திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.

    திருவள்ளூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை நகராட்சி நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
    திருவள்ளூரில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மணவாளநகர் பாலம் வரையிலுள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியருக்கு புகார்கள்வந்தன.
    இதைத் தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் செந்தில் குமரன், கட்டட வரைபட ஆய்வாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் மேற்கண்ட பகுதிகளில் 95 பேனர்கள் அகற்றப்பட்டன.
    பேனர்களை வைத்தவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அகற்றப்பட்ட பேனர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் எனவும் ஆணையர் செந்தில் குமரன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai