Enable Javscript for better performance
மனைவி, மகன் மாயம்: கணவர் புகார்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியையும், மகனையும் காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
    திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (35). இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஜனனி (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
    இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி இரவு பத்மநாபன், தனது மனைவி, பிள்ளைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் பார்த்தபோது, தீபாவையும், நிதிஷையும் காணவில்லை.
    இதையடுத்து, உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில், கடம்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai