Enable Javscript for better performance
வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

    By DIN  |   Published on : 15th October 2016 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன், மாவட்டத்திலுள்ள நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளிலிருந்து அவற்றை மீட்டெடுத்தல், ஏரி, குளங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பணிகளின் தன்மை குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியர், அவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai