ஊத்துக்கோட்டை வட்டத்துக்கான ஜமாபந்தியில் 109 பேருக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 26-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. 7 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 919 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 109 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 40 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எஞ்சிய 770 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிலா தலைமை வகித்தார். வட்டாட்சியர் கிருபா உஷா, துணை வட்டாட்சியர் லதா, மண்டல துணை வட்டாட்சியர் கதிர்வேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 74 பேருக்கு பட்டா தொடர்பான ஆணைகளும், 5 பேருக்கு வாரிசு சான்றும், 17 பேருக்கு முதியோர் ஓய்வூதிய ஆணையும், 6 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமண உதவித் தொகையாக ரூ.48 ஆயிரத்துக்கான காசோலையும், இயற்கை மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக ரூ.77,500-க்கான காசோலையையும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிலா வழங்கினார்.
இதில், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுந்தர்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மடிக்கணினிகளை சரி செய்து தரவேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதற்கான படித் தொகை வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்டத் தலைவர் சின்னதுரை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.