திருவள்ளூர் அருகே உள்ள கூவம் ஆற்றில் கழிவு நீரை விடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றில் தண்ணீர் வரும்போது மாசுபடும் அபாயமும் உள்ளது.
திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியில் கூவம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மழைக்காலம் முடிந்தாலும் பல மாதங்கள் வரை ஆற்றில் தண்ணீர் தேங்கியிருக்கும். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும்.
இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், வீடுகளில் இருந்து எடுக்கப்படும் கழிவு நீர் கூவம் ஆற்றில் விடப்படுகிறது.
இதுமட்டுமின்றி, இறைச்சிக் கழிவுகள், மீன் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், கூவம் ஆற்றில் வீசும் கடும் துர்நாற்றத்தால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, கூவம் ஆற்றில் கழிவு நீர் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.