தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் கோ.கிரிதரன் தலைமை வகித்தார். அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மையச் சங்க மாவட்டத் தலைவர் எம்.கோவிந்தராஜ், அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஜெயபால், மோகன், முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களுக்கு பிரத்யேகமான நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.