பொன்னேரி அருகே ஒரே கிராமத்தில் மூன்று கோயில்களின் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி அருகே ஆமூர் கிராமத்தில் சிலம்பாத்தம்மன், செல்லியமம்மன், சிவன் கோயில்கள் அருகருகே உள்ளன. இக்கோயில்களுக்கு புதன்கிழமை காலை பக்தர்கள் வந்தனர். அப்போது, கோயில்களின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், அதில் இருந்த பணமும் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.