திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி, வருண பகவானுக்கு இரண்டாவது முறையாக புதன்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருத்தணி முருகன் கோயிலில் மழை வேண்டி, வருண பகவானுக்கு இரண்டாவது முறையாக புதன்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின் பேரில் திருத்தணி முருகன் மலைக்கோயில் வளாகத்தில், யாக சாலை, ஒன்பது கலசங்கள் வைத்து வருண வேள்வி, வருண காயத்ரி ஜபம், வருண சூக்க பாராயணம் நடைபெற்றது. காலை, 9 மணிக்கு தொடங்கிய யாகம் 11 மணி வரை நடைபெற்றன. அப்போது, மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, ரூபா கல்யாணி, ஆனந்த பைரவி ஆகிய ராகங்களில் நாகசுர குழுவினர் வாசித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஓதுவா மூர்த்திகள் மழை வேண்டல் தேவார பதிகம் பாடினர். நந்தி பகவான் சந்நிதியில் 108 விசேஷ மூலிகைகளைக் கொண்டு வேள்வி நடத்தப்பட்டது.
பின்னர், மூலவர், கோயில் வளாகத்தில் உள்ள ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்கையம்மன்,உற்சவர் சந்நிதிகளில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி, ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருமழிசையில் வருண யாகம்...
திருவள்ளூர், மே 17: திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி அதிமுக சார்பில் புதன்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
தமிழகத்தில் மழை வேண்டியும், வறட்சி நீங்கவும் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால், எம்எல்ஏ தண்ணீர்குளம் ஏழுமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com