அம்பத்தூர் அருகே மணல் குவாரி ஊழியர்களை அரிவாளால் வெட்டி, ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
புழல் ஏரியின் பின்பகுதியான பொத்தூர் பகுதியில் மணல் குவாரி உள்ளது. ஆத்தூரைச் சேர்ந்த மகேஷ் ஒப்பந்த அடிப்படையில் இந்த குவாரியை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை 4 இருசக்கர வாகனங்களில் 8 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்தது.
அப்போது, லாரிகளில் பணம் வசூல் செய்து கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சண்முகபாண்டியன் (25), அம்பத்தூர் பிரபாகரன் (29) ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு, வசூல் பணம் ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த குவாரி ஊழியர்கள் இருவரும் திருமங்கலத்தில் உள்ளள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆவடி டேங்க் தொழிற்சாலை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.