திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பு நிலையை விட கூடுதலாக வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் இயல்பு நிலையை விட கூடுதலாக வெப்பம் உள்ளது. இதனால், பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால் ஈர துணியை தலையில் சுற்றிக் கொண்டும், குடிநீரை பாட்டிலில் எடுத்துச் சென்றும் அவ்வப்போது அருந்த வேண்டும்.
சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும், குளிர்ந்த நீரில் குளிப்பதும் நலம்.
காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது கண்ணாடி, குடை, காலணி அணிந்து செல்ல வேண்டும்.
மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, லஸ்ஸி ஆகிய குளிர்பானங்களை அருந்த வேண்டும். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் பாதிப்புகள் (பக்கவாதம், சொறி, சிரங்கு, உடல் தளர்ச்சி, தலைவலி) ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீரை வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.