செங்குன்றம் அருகே வீட்டிலிருந்த 3 பெண்களை அரிவாளாள் வெட்டிவிட்டு, தப்பிச் சென்ற ரௌடிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் அருகே உள்ள உப்பிரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). தொழிலாளியான இவரது மகள் 11-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி முதல் அவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ரமேஷும், அவரது உறவினரான முன்னாள் கவுன்சிலர் சந்திரனும் (42) இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த ரௌடிகளான முனிபாபு (22), வெள்ளை (24) ஆகியோர் ரமேஷின் மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலீஸில் புகார் அளித்ததால், சந்திரனை தாக்குவதற்காக அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை முனிபாபுவும், வெள்ளையும் வந்தனர். அவர்கள் சந்திரன் எங்கே எனக் கேட்டதாகத் தெரிகிறது.
அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த இருவரும், சந்திரனின் மனைவி பாரதி (38), இவரது தாய் ஆதியம்மா (58), உறவினர் மலர்விழி (22) ஆகியோரை சரமாரியாக வெட்டினர்.
அவர்களது அலறல் சப்தம் கேட்டு, அருகில் வசிக்கும் வேலு (22) ஓடி வந்தார். அவரையும் கத்தியால் வெட்டினர். பின்னர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சோழவரம் போலீஸார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள ரௌடி முனிபாபு, வெள்ளை ஆகியேரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.