கிடப்பில் போடப்பட்ட நீர்சேமிப்புத் திட்டம்: குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்படுமா?

பட்டரைப் பெரும்புதூரில் இருந்து வீரராவர் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கான, குழாய் பதிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என
பட்டரை பெரும்புதூர் கொசஸ்தலை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணை.
பட்டரை பெரும்புதூர் கொசஸ்தலை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தடுப்பணை.
Updated on
1 min read

பட்டரைப் பெரும்புதூரில் இருந்து வீரராவர் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கான, குழாய் பதிக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தின் மையப்பகுதி 4 மூளைகள் கொண்டதாகவும், அதன் மேற்பரப்பு 9 மூளைகள் கொண்டதாகவும் இருந்தது. 
இந்நிலையில், மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் குளத்தை 9 முனைகள் கொண்ட மிகப்பெரிய குளமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் (தற்போது மதுரை ஆட்சியர்), பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இக்குளத்தைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். 
மேலும், இந்தக் குளத்தில் 80 டிஎம்சி வரை தண்ணீர் சேமித்து வைக்க முடியும் என்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கருதப்பட்டது. 
இதையடுத்து, பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரும் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குழாய் மூலம் வீரராகவ பெருமாள் கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, அப்போதைய ஆட்சியர் வீரராகவ ராவ், முதல் கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கி, பட்டரைப் பெரும்புதூர் பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்து, பல மாதங்கள் ஆகின்றன.
ஆனால், தடுப்பணை பகுதியில் இருந்து கோயில் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர குழாய் பதிக்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 
எனவே, கிடப்பில் உள்ள இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com