

புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், கடம்பத்தூர் ரயில்வே கேட் ஒரு மணி நேரமாக மூடப்பட்டது. இதனால், திருவள்ளூர்- பேரம்பாக்கம் நெடுஞ்சலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பணிமனையிலிருந்து வந்த ஒரு ரயில், தண்டவாளம் பிரியும் இடத்தில் வியாழக்கிழமை காலை, தரையிறங்கியது.
இதனால் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சென்ற அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
திருவள்ளூரில் காவேரி, ஜோலார்பேட்டை விரைவு ரயில்களும், கடம்பத்தூரில் திருவனந்தபுரம் விரைவு ரயிலும் நிறுத்தப்பட்டன. மேலும், திருவள்ளூர்- பேரம்பாக்கம் இடையே உள்ள கடம்பத்தூர் ரயில்
நிலையம் அருகே சில ரயில்கள் நிறுத்தப்பட்டதால், அங்குள்ள ரயில்வே கேட், காலை 8.30 மணி முதல் மூடப்பட்டது.
இதனால் அந்த வழியில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீண்டநேரமாக கேட் திறக்கப்படாததால், காஞ்சிபுரம், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி,
கல்லூரி, வேலைக்கு செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம் விரைவு ரயில், கேட்டை மறித்து நின்றதால், இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளால் இனி, பாதிப்பு ஏற்படாமல் இருக்க,
கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.