Enable Javscript for better performance
தனியார் தொழிற்சாலை ஊழியர் கொலை- Dinamani

சுடச்சுட

    

    தனியார் தொழிற்சாலை ஊழியர் கொலை

    By DIN  |   Published on : 25th January 2017 03:01 AM  |   அ+அ அ-   |    |  

    செங்குன்றம் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் கொலை செய்தனர்.
    செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம், பெருங்காவூர் - ஞாயிறு செல்லும் சாலையில் பார்சல் அட்டை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
    இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    ஒடிஸா மாநிலம் கமலாசகாஸ் பட்டினத்தைச் சேர்ந்த கைலாஷ் தாத்ரா தேஷ்ரா (30), கடந்த 4 ஆண்டுகளாக இங்கு தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கைலாஷ் காய்கறி வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து, பணத்தை பறிக்க முயன்றது. இதனால், கைலாஷ் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், மர்ம கும்பல் அவரை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீஸார், அங்கு சென்று கைலாஷை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கைலாஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai