Enable Javscript for better performance
கனமழை:அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கனமழை:அரசுப் பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு

    By DIN  |   Published on : 01st November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajendran

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. 
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் கனகம்மாசத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    அப்போது பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் சென்று, மழைநீர் தேங்கியுள்ளதா, மேற்கூரை பழுதடைந்துள்ளதா என சோதனையிட்டார். 
    அப்போது, திருத்தணி அரசினர் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், சிறிதளவு தேங்கியிருந்த மழைநீரை கண்டு முதன்மை அலுவலர், அதை அகற்றி மணல் நிரப்புமாறு பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். 
    மேலும், பள்ளி வளாகத்தில் பழுதடைந்து, பயன்படுத்தாமல் உள்ள கட்டடங்களை அகற்றி தருமாறும், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். மாவட்டக் கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி, திருத்தணி பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அன்பரசன் மற்றும் இளநிலை பொறியாளர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai