Enable Javscript for better performance
கன மழை: ரயில் நிலைய நடைபாதை இடிந்து விழுந்தது- Dinamani

சுடச்சுட

    
    inducollege

    கனமழை காரணமாக இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் சுற்றுச் சுவரும், நடைபாதையும் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். 
    கடந்த 3 நாள்களாக பெய்த மழையால் சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் சாலை முழுவதும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தின், தெற்கு பகுதியான கோபாலபுரத்தை ஒட்டியுள்ள சுற்றுச்
    சுவரும், நடைபாதையும் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். எனினும், இதில் யாரும் காயமடையவில்லை. 
    சம்பவ இடத்தை திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, ஆவடி வட்டாட்சியர் மதன் ஆகியோர் பார்வையிட்டனர். சம்பவ இடத்தை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai