சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 176.40 மி.மீ. மழை பதிவானது. 
  கடந்த இரு நாள்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி, பெய்து வருகிறது. இதில், திருவள்ளூர், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், கடம்பத்தூர், சீத்தாஞ்சேரி, பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இந்த மழையால் நீர் ஆதாரங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர். 
  திருவள்ளூர் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பதிவாகியுள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): செம்பரம்பாக்கம் - 176.40, பூந்தமல்லி-170, அம்பத்தூர்-161, பொன்னேரி-159, செங்குன்றம்-103, கும்மிடிப்பூண்டி-97, சோழவரம்-95, தாமரைப்பாக்கம்-82, திருவள்ளூர்-51, பூண்டி-40.80, ஊத்துக்கோட்டை-35, திருத்தணி-31, திருவாலங்காடு-15, ஆர்.கே.பேட்டை-14, பள்ளிப்பட்டு-8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai