மணல் கடத்தல்: ஓட்டுநர் கைது; லாரி பறிமுதல்
By DIN | Published on : 01st November 2017 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் அருகே மணல் கடத்தியதாக லாரி ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதியில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, கோவில்பாக்கம் அருகே கூவம் ஆற்றில் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினர். அப்போது லாரி ஓட்டுநரைப் பிடித்தனர்.
பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் செவ்வாப்பேட்டை அருகே உள்ள குடபாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அருளை கைது செய்த போலீஸார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.