Enable Javscript for better performance
மின்னணு குடும்ப அட்டை: குடும்பத் தலைவரின் புகைப்படங்களை அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு குடும்ப அட்டை: குடும்பத் தலைவரின் புகைப்படங்களை அளிக்கலாம்

    By DIN  |   Published on : 01st November 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் சரியில்லாதோர் தங்களது புகைப்படங்களை வரும் 3-ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதி நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்களிடம் அளிக்க வேண்டும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இல்லாததால், சில குடும்ப அட்டைகள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால் புகைப்படம் தேவைப்படும் குடும்ப உறுப்பினர்களின் விவரப் பட்டியல் ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் பார்வைக்கு இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு, புகைப்படம் இல்லாதோர் வரும் 3 -ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடையில் விற்பனையாளர்களிடம் அளித்து விரைவில் மின்னணு குடும்ப அட்டைகளை அச்சிட உதவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai