சுடச்சுட

  

  லட்சுமிபுரம் அணைக்கட்டு உபரி நீர் திறப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

  By DIN  |   Published on : 01st November 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொன்னேரி அருகே அணைக்கட்டு நிரம்பியுள்ளதால் உபரிநீர் திறந்து விடப்படுவதால், வரத்துக் கால்வாயில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
  இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு அதன் முழுக் கொள்ளளவான 10 அடியை எட்டியுள்ளது. இதனால் அந்த அணையின் வலது மற்றும் இடது மதகுகள் மூலமாக விநாடிக்கு 80 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. 
  இதனால், குமாரசிறுளபாக்கம், காட்டூர், தத்தமஞ்சி, பெரும்பேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வரத்துக் கால்வாயின் அருகே செல்லவோ அல்லது அதனுள் இறங்கவோ வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai