சுடச்சுட

    

    வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 01st November 2017 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sundaravali

    திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
    இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் மிக அதிக அளவில் பாதிக்கும் பகுதியாக 18 இடங்களும், அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 74 இடங்களும், மிதமான பாதிப்புக்கு உள்படும் பகுதிகளாக 64 இடங்களும், குறைந்த அளவில் பாதிக்கும் பகுதிகளாக 44 இடங்களும் என மொத்தம் 200 பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இங்கு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். 
    அதேபோல், பேரிடர் சமயங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 5 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களும், 4 புயல் பாதுகாப்பு மையங்களும், 178 தாற்காலிக முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும், மீட்புப் பணிக்காக நீச்சல் தெரிந்த 145 நபர்கள் மற்றும் 11 படகுகளும், இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஏரி குளங்கள் உடைப்புகளை சரி செய்வதற்காக மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரம், நீர் வெளியேற்றும் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், குளோரின் மாத்திரைகள், பிளீச்சிங் பவுடர், குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவை பருவ மழையினை எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளன. 
    அதேபோல், பொதுப்பணித்துறை சார்பில் பராமரிக்கப்படும் 589 ஏரிகளில், 27 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், 3,873 குளம், குட்டைகளில் 23 குளம், குட்டைகள் நிரம்பியுள்ளன. மேலும், அந்தந்த பகுதிகளில் ஏற்படும் இடர்பாடுகளை தடுக்க பொறுப்பு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 
    மேலும், கனமழை தொடர்பாக தகவல் அளிக்க வருவாய் கோட்ட அளவில் திருவள்ளூர்- 044-27660248, 9940318661, பொன்னேரி-044-27974073, 8608984066, திருத்தணி-044-27885877, 9994123566, அம்பத்தூர்-04426541221, 9444555950 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் . 
    இதேபோல், திருவள்ளூர் மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044-27664177, 27666746 ஆகிய எண்களிலும், 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai