சுடச்சுட

  
  kavarapettai

  கும்மிடிப்பூண்டி அருகே வரத்து கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழை வெள்ள நீர் வடியாமல் விவசாய பயிர்களை சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
  கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஏரியின் வரத்துக் கால்வாயை தனியார் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. 
  இதனால் திங்கள்கிழமை பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர், வெளியேற வழி இன்றி, சுமார் 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகள், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாயின் அருகே முற்றுகையில் ஈடுபட்டனர் . 
  இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபாலின் உத்தரவின்பேரில், இரு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களில் சூழ்ந்த வெள்ள நீர் சில மணி நேரத்தில் வடிந்தது. இதையடுத்து விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai