சுடச்சுட

    
    dhandalam

    தண்டலம் வனத்தோட்டம் பகுதி குடியிருப்பில் சூழ்ந்த மழை நீரில் நின்று ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் சிறுவர்கள்.

    பெரியபாளையம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே தண்டலம் வனத்தோட்டம் பகுதியில் திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் குடியிருப்புகளை சூழ்ந்த முழங்கால் அளவு நீரில் செவ்வாய்க்கிழமை நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் அங்கு வராததால், அவர்கள் தண்டலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்கோட்டை துணை வட்டாட்சியர் கதிர்வேல், பொதுமக்களை சமாதானப்படுத்தினார். கால்வாய் வெட்டி, மழை வெள்ள நீரை வடியச் செய்வதாகக் கூறினார். 
    பின்னர், கால்வெட்டி மழைநீர் வெளியேற்றப்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai