Enable Javscript for better performance
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    By DIN  |   Published on : 02nd November 2017 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    people

    வேப்பம்பட்டில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோர்.

    திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி புதன்கிழமை தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூங்கோதை (50). இவர், அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். 
    இவரது வீட்டருகே செல்லும் மண் பாதையை சிலர் ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்ததாகத் தெரிகிறது. இதனால் பாதை வசதியின்றி சிரமப்பட்டதால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 
    இதைத்தொடர்ந்து, ஆக்கிரமித்து அமைத்துள்ள வீடுகளைச் சேர்ந்த லோகசந்திரன், நடராஜன், தியாகராஜன் உள்பட 4 பேருக்கு அகற்றப்போவதாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், மழை பெய்து வருவதால் காலி செய்யாமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் முரளி, செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட போலீஸார் புதன்கிழமை அப்பகுதிக்கு சென்றனர். 
    அதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளுக்குள் இருந்த பொருள்களை வெளியே அகற்றினர். பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினர்.
    அப்போது, லோகசந்திரனின் சகோதரி லீலாவதி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
    இதனை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றத்தால், பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வேப்பம்பட்டு-புதுச்சத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை செவ்வாப்பேட்டை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai