சுடச்சுட

  
  lake

  லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதையடுத்து வெளியேறும் உபரிநீர்.

  பொன்னேரி பகுதியில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது.
  பொன்னேரியில் இருக்கும் ஆரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஆரணி, புதுவாயல், ஏலியம்பேடு, வைரங்குப்பம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆரணி ஆற்றில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. 
  லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது... 
  ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கர்னேத் நகர் பகுதியில் தொடங்கி பழவேற்காட்டில் உள்ள உவர் நீர் ஏரியில் ஆரணி ஆறு கலக்கிறது. ஆரணி ஆறு சுமார் 65 கி.மீ. தொலைவு ஆந்திரத்திலும், 65கி.மீ தொலைவு தமிழகத்திலும் ஓடுகிறது. ஆரணி ஆற்றின் நீர் பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் கலந்து வீணாவதைத் தடுக்க, பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் அணை கட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன.
  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக, லட்சுமிபுரம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்படிருந்த அணை உடைந்தது. 
  இதையடுத்து, 2005-ஆம் ஆண்டு 116 மீட்டர் நீளத்திலும், 4.15மீட்டர் உயரத்திலும் புதிய அணை கட்டப்பட்டது. அத்துடன் லட்சுமிபுரம் அணையில் இருந்து, உபரியாக செல்லும் நீர், பழவேற்காடு உவர்ப்பு ஏரியில் வீணாகி கலப்பதை தடுக்கும் வகையில், ரெட்டிப்பாளையம் பகுதியில் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு புதிய அணை கட்டப்பட்டு, அங்கும் தற்போது மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது.
  இந்நிலையில் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் லட்சுமிபுரம் அணைக்கட்டில் தேங்கியுள்ள நீரை பாசனம் மற்றும் காட்டூர், தத்தைமஞ்சி, பெரும்பேடு ஏரிகளுக்குச் செல்லும் வகையில், இருபுறமும் உள்ள 6 தலைமை மதகுகளை திறந்து, அதன் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர். அத்துடன் லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் உபரி நீர் ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. 
  லட்சுமிபுரம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்த்து செல்கின்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai